வர்தா புயல் நிவாரணப் பணிகள் எந்தப் பகுதியிலும் சரியாக நடைபெறவில்லை: விஜயகாந்த் கண்டனம்
\
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: வர்தா புயல் சென்னையை நோக்கி வருகிறது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறபித்தது. புயலுடன் பெய்த மழைநீரை உடனுக்குடன் அகற்றிட அரசு இயந்திரம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் அறிவித்தார்கள். புயல் காற்று சுழல் காற்றாக அதிவேகத்தில் வீசியதால் சாலைகள் மற்றும் தெருக்களில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்ததால், மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-urges-speed-up-efforts-on-cyclone-damages-relief-270028.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-urges-speed-up-efforts-on-cyclone-damages-relief-270028.html
No comments:
Post a Comment