Nikon camera

Sunday, 18 December 2016

Tamil nadu politisan news

புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி கோர டெல்லி செல்கிறார் முதலமைச்சர்


முதலமைச்சர் பன்னீர்செல்வம் நாளை பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்தித்து, வர்தா புயலால் ஏற்பட்டுள்ள புயலுக்கு நிவாரண நிதி கோர உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் பன்னீர்செல்வம் நாளை பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்தித்து, தமிழ்நாட்டில் வர்தா புயலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்கவும், தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டியும், ஜெயலலிதாவின் முழு உருவ வெங்கலச் சிலையினை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கவும் கடிதங்களை அளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரதமரை சந்தித்த பின்னர் திங்கட்கிழமை அன்றே முதலமைச்சர் சென்னை திரும்புவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment